வியாழன், 17 ஜூன், 2010
மீண்டும் வருகிறேன்
ஏறத்தாழ ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் இந்தப் பக்கத்தில் எழுத வருகிறேன். ஏற்கனவே தமிழகத்தில் ஏகப்பட்ட பேர் எழுதிக் கொண்டிருக்கும் நிலையில், நான்வேறு குட்டையைக் குழப்ப வேண்டுமா என்கிற உரத்த சிந்தனையாலும், சோம்பேறித்தனத்தாலும் தொடர்ந்து எழுதாமல் இருந்தேன். விதி யாரை விட்டது? ஜெய் கணேஷ், வெற்றி, ஆனந்த் என நண்பர்களின் தூண்டுதலால் மீண்டும் எழுத வந்துவிட்டேன்.
நாளை மற்றொரு நாளே. நான் எழுதுவதால் தமிழ்நாட்டில் பெரிதாக எதுவும் நடந்துவிடப் போவதில்லை என்பது எனக்கும் தெரியும். இருந்தாலும் இந்த சுயஇன்பம் எனக்கும் கொஞ்சம் பிடித்திருக்கிறது. முன்பு எழுதிய 'செந்தில்களின் அட்டகாசங்கள்' என்ற பதிவு நண்பர்களின் பாராட்டுகளைப் பெற்றது. அதை மீண்டும் பதிவு செய்கிறேன். அதேநேரம் நடிகை கேட் வின்ஸ்லெட் பற்றிய 'மேக்-அப் இல்லா அழகி' என்ற பதிவு விமர்சனதிற்குள்ளானது. இப்போது அதைப் படித்தால் எனக்கே அபத்தமாக இருக்கிறது. எனவே அதை தவிர்க்கிறேன்.
தாழ்வு மனப்பான்மையால் எனக்குள் நானே செத்துக்கொண்டிருந்த காலத்தில் போப்புவின் 'நாளைக்கு மழை பெய்யும்' என்ற சிறுகதைத் தொகுப்பு எனக்கு நம்பிக்கை அளித்தது. தாழ்வு மனப்பான்மையில் இருந்து இப்போது ஓரளவிற்கு மீண்டுவிட்ட நிலையில் போப்புவை நன்றியுடன் நினைவு கூர்வதோடு, இந்தப் பக்கத்திற்கு 'நாளைக்கு மழை பெய்யும்' என்று பெயர் வைத்துள்ளேன். ஆரண்யம் என்ற பெயர் எனக்குப் பிடித்திருக்கிறது என்பது தவிர வேறு காரணமில்லை.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

0 comments:
கருத்துரையிடுக